சினிமா செய்திகள்

ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது குவியும் வாழ்த்துக்கள் + "||" + Rajinikanth Dadasaheb Phalke Award Congratulations accumulation

ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது குவியும் வாழ்த்துக்கள்

ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது குவியும் வாழ்த்துக்கள்
ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது குவியும் வாழ்த்துக்கள்; அரசியல் தலைவர்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்
சென்னை

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் ரஜினிகாந்தின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ரஜினிக்கு 51-வது தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பதிவில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் தலைவாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “பல தலைமுறைகளிடையே பிரபலமானவர், இவரது வேலையில் இருக்கும் பன்முகத்தன்மைக்கு ஈடாக ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். வித்தியாசமான கதாபாத்திரங்கள், அன்பான ஒரு ஆளுமை. அதுதான் ரஜினிகாந்த். தலைவனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்பது அதிக மகிழ்ச்சியைத் தரும் ஒரு செய்தி. அவருக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். 

தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த்  அவர்களுக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன். திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது. தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது!. நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார். 

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:

இந்திய சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான  தாதா சாகேப் பால்கே விருது பெறும்  பெறும் அன்புச் சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். என கூறி உள்ளார்.

கமல்ஹாசன்:

உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் என கூறி உள்ளார்.

தெலங்கானா கவர்னர்  தமிழிசை: 

நடிப்பிலும், நாட்டின் நடப்பிலும் அக்கறை கொண்ட சகோதரர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. எனது வாழ்த்துகள்.

எல்.முருகன், தமிழக பாஜக தலைவர்: 

உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது நடிகர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியையும், நடிகர் ரஜினிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்

டிடிவி தினகரன்: 

திரைத்துறையினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் உயரிய விருதான “தாதா சாகேப் பால்கே” விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரையுலகிற்கு மிகச் சிறந்த பங்களிப்பை ரஜினிகாந்த் வழங்கி வருவதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. தாதா சாகேப் பால்கே விருது மட்டுமின்றி மென்மேலும் பல சிகரங்களைத் தொட நண்பர் ரஜினிகாந்தை இத்தருணத்தில் வாழ்த்துகிறேன்!

அன்புமணி ராமதாஸ்:

 இந்தியாவில் திரைத்துறையின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விருது பெற்ற இனிய நண்பர் ரஜினிகாந்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக இந்த விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டிருப்பது தமிழ்த் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும்!

விஜய் வசந்த்: 

தாதா சாகேப் விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தமிழகமே பெருமை கொள்ளும் தருணம் இது. பல்லாண்டு வாழ்க நலமுடன்.

சிரஞ்சீவி: 

மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது என் அன்பு நண்பர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டிருப்பதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். திரைத்துறையில் உங்கள் பங்களிப்புகள் மகத்தானவை, அளவிட முடியாதவை. என் மனமார்ந்த வாழ்த்துகள் நண்பா.

குஷ்பு: 

ஒரே ஒரு சூப்பர் ஸ்டாரான ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது. சிறந்த மகிழ்ச்சி. உங்களுக்கு வாழ்த்துகள் சார். சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்

பிரித்விராஜ்: 

வாழ்த்துகள் ரஜினி சார். உங்களுக்கு உரிய அங்கீகாரம். தாதா சாகேப் பால்கே விருது.

மகேஷ் பாபு: 

தாதா சாகேப் பால்கே விருது வென்றதற்கு வாழ்த்துகள் ரஜினிகாந்த் சார். திரைத்துறைக்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது. நீங்கள் உண்மையில் ஒரு உந்து சக்தி.

வெங்கடேஷ்: 

51-வது தாதா சாகேப் பால்கே விருதை வென்ற தலைவர் ரஜினிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

போனி கபூர்: 

2019ஆம் ஆண்டுக்கான, பெருமைக்குரிய தாதா சாகேப் பால்கே விருதை வென்றதற்கு வாழ்த்துகள் ரஜினிகாந்த். உண்மையில் உங்களுக்கு உரிய கவுரவம் இது.

லிங்குசாமி: 

தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரஜினிக்கு வாழ்த்துகள்.

ரசூல் பூக்குட்டி: 

ஒரு வழியாக நமது தலைவர் ரஜினிகாந்துக்கு உரிய அங்கீகாரம். மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்கிறேன். தாதா சாகேப் பால்கே வென்ற அற்புதமான அந்த நடிகருக்கு வாழ்த்துகள்.

நதியா: 

தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரஜினிக்கு வாழ்த்துகள். சரியான நபருக்கு, உரிய விருது வழங்கப்பட்டிருக்கிறது.

ராதிகா சரத்குமார்:

 தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரஜினிக்கு வாழ்த்துகள். பிரம்மிக்கதக்க நட்சத்திர அந்தஸ்தை அடைந்த ஒரு மனிதருக்கு உண்மையில் உரிய விருது.

லாரன்ஸ்: 

தாதா சாகேப் பால்கே விருதை தலைவர் சூப்பர் ஸ்டார் பெறப்போகிறார் என்பதைக் கேள்விப்பட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவரை வாழ்த்தும் அளவுக்கு எனக்கு வயதில்லை. அவரது பெருமை என்றென்றும் நிலைத்து நிற்கட்டும். குருவே சரணம்.

சேரன்: 

நீங்கள் கலைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறுவதில் மகிழ்ச்சி ரஜினிகாந்த் சார்.

விவேக்:

அன்பு ரஜினி சார்!! என் இதயபூர்வ வாழ்த்துக்கள். கோடானுகோடி ரசிகர்களில் ஒருவனாக!! இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே பெற்றமைக்கு!! அன்று குருவுக்கு! இன்று அவர் மாணவருக்கு !

கவுரவ் நாராயணன்: 

தாதா சாகேப் பால்கே விருது வென்ற அன்பார்ந்த தலைவருக்கு, உலகின் அன்பார்ந்த சூப்பர் ஸ்டாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தற்போது அந்த விருதுக்கு அதிக விளம்பரமும், பெருமையும் கிடைத்திருக்கிறது.

சுரேஷ் காமாட்சி:

 நடிப்பிற்கு நடிப்பு, ஸ்டைலுக்கு ஸ்டைல் என இந்திய சினிமாவின் அடையாளமாக உயர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. இவ்விருது உங்களை இன்னும் உற்சாகப்படுத்தட்டும். வாழ்த்துகள்
என கூறி உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. "கோபப்பட்டு பாத்தது இல்லையே"... வெளியானது அண்ணாத்த படத்தின் டீசர்
'அண்ணாத்த' படத்தின் டீசரில், நடிகர் ரஜினிகாந்த் தோன்றும் பரபரப்பான சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
2. இன்று மாலை வெளியாகிறது 'அண்ணாத்த' டீசர்
விஸ்வாசம் படத்திற்கு பின் டைரக்டர் சிறுத்தை சிவா தற்போது ஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கியுள்ளார்.
3. 'சாரல் சாரல் காற்றே ' அண்ணாத்த படத்தின் 2வது பாடல் வெளியானது
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் 2வது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
4. ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘முதல் சிங்கிள்’ அக்டோபர்-4 வெளியாகிறது
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘முதல் சிங்கிள்’ அக்டோபர்-4ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
5. இயக்குனர் ஷங்கர் மகளை வாழ்த்திய ரஜினிகாந்த்
ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் பட உலகில் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.