பிரபல டைரக்டர் மரணம்


பிரபல டைரக்டர் மரணம்
x
தினத்தந்தி 1 April 2021 7:40 PM GMT (Updated: 1 April 2021 7:40 PM GMT)

பிரபல மலையாள டைரக்டர் டி.எஸ்.மோகன் மரணம் அடைந்தார்.

பிரபல மலையாள டைரக்டர் டி.எஸ்.மோகன் மரணம் அடைந்தார். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், திரைக்கதையாசிரியர் என்று பன்முக திறமை கொண்டவர். சுகுமாரன், கிருஷ்ண சந்திரன், வின்சென்ட், ரதீஷ், பிரமிளா, ஷோபா ஆகியோர் நடித்து 1979-ல் வெளியான லில்லி பூக்கள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மம்முட்டி, ரதீஷ் ஆகியோர் நடிப்பில் இவர் இயக்கிய விடிச்சதும் கிழிச்சதும் மலையாள படம் பெரிய வெற்றி பெற்றது. சுகுமாரன், ரதீஷ், உன்னிமேரி ஆகியோர் நடிப்பில் மோகன் இயக்கிய பெல்ட் மேதை படமும் பெரிய வெற்றி பெற்றது. கவுசலாம், கெலிகோட்டு, சத்ரு, படயானி உள்ளிட்ட பல முக்கிய மலையாள படங்களை இயக்கி உள்ளார். இயக்குனர் மோகன் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. மோகன் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story