சினிமா செய்திகள்

பிரபல பாடகர் பப்பி லஹரிக்கு கொரோனா + "||" + Corona to famous singer Puppy Lahari

பிரபல பாடகர் பப்பி லஹரிக்கு கொரோனா

பிரபல பாடகர் பப்பி லஹரிக்கு கொரோனா
பிரபல இந்தி இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹரி இந்திய திரையுலகில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்தியவர் ஆவார்.
பிரபல இந்தி இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹரி இந்திய திரையுலகில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்தியவர் ஆவார். இவர் ஏராளமான இந்தி படங்களுக்கு இசையமைத்து பாடல்களும் பாடி இருக்கிறார். தமிழில் கார்த்திக் நடித்த அபூர்வ சகோதரிகள், ஆனந்த் பாபு நடித்த பாடும் வானம்பாடி, சுரேஷ் நடித்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். கருப்பம்பட்டி படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளார். தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். பப்பி லஹரிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாவது அலையில் திரையுலகினர் பலர் சிக்கி வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் அமீர்கான், மாதவன், வில்லன் நடிகர் பவேஷ் ராவல், பக்ரு ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரே நாளில் 892 பேருக்கு கொரோனா; 10 பேர் பலி
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் 892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 26 ஆயிரத்தை கடந்தது.
2. மாவட்டத்தில் புதிதாக 291 பேருக்கு கொரோனா தொற்று
கரூர் மாவட்டத்தில் புதிதாக 291 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் பலகோடி மதிப்பிலான டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி பொருட்கள் தேக்கம்
கரூரில் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் பலகோடி மதிப்பிலான டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.
4. இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர்கள் கொரோனாவுக்கு பலி
இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரரான ரவிந்தர் பால் சிங் கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
5. 27,397 பேருக்கு கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் 241 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். 27,397 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.