சினிமா செய்திகள்

இந்தியில் சூர்யா படம் + "||" + Surya film in Hindi

இந்தியில் சூர்யா படம்

இந்தியில் சூர்யா படம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தை தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி கடந்த நவம்பர் மாதம் ஓ.டி.டி தளத்தில் வெளியிட்டனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தை தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி கடந்த நவம்பர் மாதம் ஓ.டி.டி தளத்தில் வெளியிட்டனர். தெலுங்கு மொழியிலும் வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யா நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. அபர்ணா பாலமுரளி நாயகியாக வந்தார். பரேஷ் ராவல், ஊர்வசி, மோகன்பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். சூரரைப்போற்று படத்தை சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால் இறுதி பட்டியலில் இடம்பெறாமல் ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் சூரரைப்போற்று படத்தை அடுத்து இந்தி மொழியிலும் வெளியிடுகிறார்கள். இந்தியில் உடான் என்ற பெயரில் டப்பிங் செய்துள்ளனர். இந்தியில் சூரரைப்போற்று அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். ஏற்கனவே சூர்யா இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். எனவே சூரரைப்போற்று படம் இந்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து
மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து.
2. விஜய்யின் 66-வது படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது.
3. அஜித் குமாரின் 61-வது படம்
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 60-வது படமான வலிமை படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.
4. தனுஷ் படம் ஓ.டி.டி.யில் ஜூன் மாதம் ரிலீஸ்
கொரோனா 2-வது அலை தீவிரமானதால் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷா நடித்துள்ள ராங்கி மற்றும் பீட்சா 2-ம் பாகம் உள்ளிட்ட பல படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.
5. வரலாற்று பின்னணியில் சன்னி லியோன் நடிக்கும் நகைச்சுவை திகில் படம்
நகைச்சுவை-திகில் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். நகைச்சுவை, திகில் இரண்டும் சரிசம விகிதத்தில் கலந் திருக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளன.