சினிமா செய்திகள்

திருமண வதந்தியால் கீர்த்தி சுரேஷ் காட்டம் + "||" + Keerthi Suresh shows up due to marriage rumors

திருமண வதந்தியால் கீர்த்தி சுரேஷ் காட்டம்

திருமண வதந்தியால் கீர்த்தி சுரேஷ் காட்டம்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேசுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. இசையமைப்பாளர் அனிரூத்துடன் கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் நண்பர்கள்தான் காதல் இல்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தார்கள். பின்னர் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபருடன் கீர்த்தி சுரேசுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளதாக தகவல் பரவியது. இதனை அவர் மறுத்தார். எனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றார். ஆனாலும் தொடர்ந்து திருமண வதந்திகள் பரவி வருகின்றன. இதனால் காட்டமான கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. சில இணைய தளங்களில் நான் திருமணம் செய்து கொண்டதாக 3, 4 தடவை செய்திகள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நபருடன் திருமணம் நடந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் திருமணம் செய்து கொள்ள இன்னும் காலம் இருக்கிறது'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதி காட்டம்
நடிகர் விஜய்சேதுபதி ஓட்டு போட்டு விட்டு நிருபர்களிடம் கூறும்போது, “நான் ஓட்டு போட்டு இருக்கிறேன். வாழ்க ஜனநாயகம். நன்றி'' என்றார்.
2. தொழில் அதிபருடன் எனக்கு திருமணமா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்
தொழில் அதிபருடன் எனக்கு திருமணமா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்.
3. இந்துத்வா கொள்கை: பா.ஜனதாவிடம் சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை சஞ்சய் ராவத் காட்டம்
இந்துத்வா கொள்கையில் பா.ஜனதாவிடம் இருந்து சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை என்று சஞ்சய் ராவத் கூறினார்.