சினிமா செய்திகள்

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கை கதை படத்தில் டாப்சி + "||" + Topsy in the life story film of tennis player Sania Mirza

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கை கதை படத்தில் டாப்சி

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கை கதை படத்தில் டாப்சி
விளையாட்டு வீரர்கள் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகின்றன. கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி வாழ்க்கை படங்கள் வந்தன.
விளையாட்டு வீரர்கள் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகின்றன. கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி வாழ்க்கை படங்கள் வந்தன. குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கை பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியானது. பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நெய்வால், பி.வி.சிந்து, துப்பாக்கி சுடும் வீரர் அபிநவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகிறது. இந்த வரிசையில் பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கையும் படமாகிறது. சானியா குட்டை பாவாடை அணிந்து விளையாடியது விமர்சனங்களை கிளப்பியது. இரட்டையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தியாவின் உயரிய பத்மஶ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் பெற்றுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். சானியாவின் சிறுவயது வாழ்க்கை, டென்னிஸ் விளையாட்டில் நிகழ்த்திய சாதனைகள் போன்றவற்றை படத்தில் கொண்டு வருகிறார்கள். இந்த படத்தில் சானியா மிர்சா வேடத்தில் நடிக்க பரிணிதி சோப்ராவை பரிசீலித்தனர். இப்போது அவருக்கு பதில் டாப்சியை நடிக்க வைக்க அவரிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். டாப்சி ஏற்கனவே ஓட்டப்பந்தய வீராங்கனையாக ராஷ்மி ராக்கெட் படத்தில் நடித்து வருகிறார்.