சினிமா செய்திகள்

நடிகையான சந்தன கடத்தல் வீரப்பன் மகள் + "||" + Daughter of actress Chandana abduction Veerappan

நடிகையான சந்தன கடத்தல் வீரப்பன் மகள்

நடிகையான சந்தன கடத்தல் வீரப்பன் மகள்
தமிழக அதிரடி படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜய லட்சுமி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
தமிழக அதிரடி படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜய லட்சுமி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். வித்யாராணி கடந்த வருடம் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இளைய மகள் விஜயலட்சுமி நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். விஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை' என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை கே.என்.ஆர்.ராஜா இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறார். விஜயலட்சுமி நடிக்கும் தோற்றத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர். அதில் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு போராளியாக நிற்கிறார். மது ஒழிப்பு மற்றும் தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை பற்றிய போராட்டங்களை மையப்படுத்தி இந்த படம் தயாராகி உள்ளது.

விஜயலட்சுமி போராட்டங்களை முன்நின்று நடத்தும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார், வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து ஏற்கனவே வன யுத்தம், வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயர்களில இரண்டு படங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் வீரப்பன் மகள் தற்போது போராளியாக நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் பாய்ந்த மகள்
ராஜஸ்தானில் கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் அவரது மகள் பாய்ந்த அதிர்ச்சி அசம்பவம் நிகழ்ந்தது.
2. மழைநீர் கால்வாயில் விழுந்து இறந்த தாய், மகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
மழைநீர் கால்வாயில் விழுந்து இறந்த தாய், மகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
3. டி.வி. தொடரில் இருந்து விலகும் நடிகரின் மகள்!
‘சின்னத்திரை’யில் சமீபத்தில் தொடங்கி ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘பூவே உனக்காக’. அதில் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருபவர் ஜோவிட்டா.