சினிமா செய்திகள்

காதலில் அனு இம்மானுவேல் + "||" + Anu Emmanuel in love

காதலில் அனு இம்மானுவேல்

காதலில் அனு இம்மானுவேல்
நடிகர்-நடிகைகள் ரகசியமாக காதலிப்பதும் திடீரென்று அது வெளிச்சத்துக்கு வருவதும் வழக்கமாக நடக்கிறது. தற்போது நடிகை அனு இம்மானுவேலும், தெலுங்கு நடிகர் அல்லு சிரிசும் ரகசியமாக காதலித்து வருவது அம்பலமாகி உள்ளது.
நடிகர்-நடிகைகள் ரகசியமாக காதலிப்பதும் திடீரென்று அது வெளிச்சத்துக்கு வருவதும் வழக்கமாக நடக்கிறது. தற்போது நடிகை அனு இம்மானுவேலும், தெலுங்கு நடிகர் அல்லு சிரிசும் ரகசியமாக காதலித்து வருவது அம்பலமாகி உள்ளது. அனு இம்மானுவேல் தமிழில் விஷாலுடன் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்துள்ளார். சர்வானந்த், சித்தார்த் நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகும் மகாசமுத்திரம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அல்லு சிரிஷ் தெலுங்கில் இளம் கதாநாயகனாக வளர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கில் வெளியான கவுரவம் படத்திலும் நடித்து இருக்கிறர். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன் என்பதும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அனு இம்மானுவேல் பிறந்த நாள் கொண்டாடினார். அப்போது அனுவை வாழ்த்தி அல்லு சிரிஷ் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் இருவரும் நெருக்கமாக உள்ளனர். அனுவை சைக்கோ என்றும் செல்லமாக அழைத்து உள்ளார். இந்த வீடியோ அவர்கள் காதலை உறுதிப்படுத்தி இருப்பதாக தெலுங்கு பட உலகினர் பேசுகிறார்கள்.