சினிமா செய்திகள்

பிரபல இந்தி நடிகை அலியா பட்டுக்கு கொரோனா + "||" + Corona to famous Hindi actress Alia Pattu

பிரபல இந்தி நடிகை அலியா பட்டுக்கு கொரோனா

பிரபல இந்தி நடிகை அலியா பட்டுக்கு கொரோனா
பிரபல இந்தி நடிகை அலியாபட். இவர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அலியாபட்டுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியானது.
பிரபல இந்தி நடிகை அலியாபட். இவர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அலியாபட்டுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியானது. இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என்று கூறியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். கடந்த மாதம் அலியாபட்டின் காதலரான ரன்பீர் கபூருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதால் மும்பையில் வசிக்கும் இந்தி பட உலகினர் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு இந்தி முன்னணி நடிகர் அமீர்கானுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது சூர்யாவின் சூரரை போற்று படத்தில் வில்லனாக நடித்த பவேஷ் ராவல், இந்தி பாடகரும் இசையமைப்பாளருமான பப்பி லஹரி ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு கேட்டு காங்கிரசின் ஆன்லைன் பிரசாரம்
இந்தியாவில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஆன்லைன் பிரசாரம் தொடங்கி உள்ளது.
2. கரூரில் 15 பேருக்கு கொரோனா
கரூரில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
3. தமிழ்நாட்டில் இன்று 731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று புதிதாக மேலும் 731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கரூரில் 12 பேருக்கு கொரோனா
கரூரில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்த இருவருடன் தொடர்பில் இருந்த 500-பேரைக் கண்டறிந்து பரிசோதனை
உலகை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனாவான ‘ஒமைக்ரான்’ இந்தியா வுக்குள் நுழைந்தது.