சினிமா செய்திகள்

விஷால் நடிக்கும் 31-வது படம் + "||" + 31st film starring Vishal

விஷால் நடிக்கும் 31-வது படம்

விஷால் நடிக்கும் 31-வது படம்
விஷால் நடித்து 2019-ல் அயோக்யா, ஆக்‌ஷன், சக்ரா படங்கள் வந்தன. கொரோனாவால் கடந்த வருடம் அவருக்கு படங்கள் இல்லை, துப்பறிவாளன் 2-ம் பாகத்தில் நடித்து வந்தார்.
விஷால் நடித்து 2019-ல் அயோக்யா, ஆக்‌ஷன், சக்ரா படங்கள் வந்தன. கொரோனாவால் கடந்த வருடம் அவருக்கு படங்கள் இல்லை, துப்பறிவாளன் 2-ம் பாகத்தில் நடித்து வந்தார். அந்த படத்தின் இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட மோதலால் படம் பாதியில் முடங்கி உள்ளது. இந்த படத்தை விஷாலே இயக்கப்போவதாக அறிவித்து உள்ளார். ஆனாலும் பட வேலைகளை இன்னும் தொடங்கவில்லை. தற்போது எனிமி படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். கதாநாயகியாக மிருனாளினி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. எனிமி படத்துக்கு பிறகு விஷால் தனது 31-வது படமாக புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் குள்ளநரி கூட்டம் இயக்குனர் பாலாஜி, தேன் பட இயக்குனர் கணேஷ் விநாயக் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தையும் இயக்கி உள்ளார். விஷாலை வைத்து இவர் இயக்கும் படம் அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் ஒரு சாமானியன் கதை கருவில் தயாராகிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊர்வசியின் 700-வது படம்
தமிழில் 1983-ல் வெளியான முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ஊர்வசி. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.
2. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் பிரபு தேவா படம்
நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் பிரபுதேவாவின் புதிய படம் ஒன்று நேரடியாக ஓட்டி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
3. ஜப்பானிய மொழியில் வெளியாகும் கார்த்தியின் பிளாக்பஸ்டர் ஹிட் படம்
கார்த்தி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
4. ‘துப்பறிவாளன் 2’ மீண்டும் தொடங்குவது எப்போது? - விஷால் விளக்கம்
கடந்த ஓராண்டாக ‘துப்பறிவாளன் 2’ குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருந்த விஷால், தற்போது அதுகுறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
5. முதல்முறையாக ஆகாய கங்கை பகுதியில் பிரபுதேவா படம்
கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கையில் மிகுந்த சிரமங்களுக்கிடையே முதல் முறையாக பிரபுதேவா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.