சினிமா செய்திகள்

18 வயதில் கன்னி பருவத்தில் அபார்ஷன்... 63 வயதில் மனம் திறந்த நடிகை + "||" + Abortion in the virgin season at the age of 18 ... 63 year old open minded actress

18 வயதில் கன்னி பருவத்தில் அபார்ஷன்... 63 வயதில் மனம் திறந்த நடிகை

18 வயதில் கன்னி பருவத்தில் அபார்ஷன்... 63 வயதில் மனம் திறந்த நடிகை
பள்ளியில் படித்தபொழுது, காதலரால் கர்ப்பிணியாகி அதனை அபார்சன் செய்து யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தது பற்றி நடிகை ஷாரன் ஸ்டோன் மனம் திறந்துள்ளார்.
வாஷிங்டன்,

பேசிக் இன்ஸ்டிங்ட் என்ற படத்தில் நடித்து புகழ் பெற்ற அமெரிக்க நடிகை ஷாரன் ஸ்டோன்.  பென்சில்வேனியா நகரில் வளர்ந்த 63 வயது நடிகையான ஷாரன், தனது நினைவுகள் அடங்கிய தொகுப்பினை கொண்ட தி பியூட்டி ஆப் லிவிங் டுவைஸ் என்ற புத்தகத்தில் பல விசயங்களை பற்றி குறிப்பிட்டு உள்ளார்.

அவற்றில் தனது பள்ளி பருவம் பற்றியும் விளக்கியுள்ளார்.  அதில், பள்ளியில் படித்தபொழுது, ஆண் நண்பர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு, அவருடன் சுற்றி திரிந்துள்ளார்.  இதில் ஷாரன் கர்ப்பிணியானார்.

இதனால் ஓஹியோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அவர்கள் ஓடோடி சென்றுள்ளனர்.  ஏனெனில், அந்த மருத்துவமனையில் அபார்சன் செய்வது எளிது என குறிப்பிட்டு உள்ளார்.

அதன்பின் அவருக்கு அதிகப்படியான ரத்த போக்கு ஏற்பட்டு உள்ளது.  ஆனாலும், அதனை யாரிடமும் கூறாமல் ரகசியம் காத்து வந்துள்ளார்.  சென்ற இடத்திலெல்லாம் அவருக்கு தொடர்ந்து ரத்த போக்கு ஏற்பட்டு வந்துள்ளது.

நிலைமை மோசமடைந்து உள்ளது.  ஆனால், இது ரகசியமான விசயம்.  தவிர இதுபற்றி கூறுவதற்கு என தனக்கு ஒருவரும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  பின்பு, ரத்தம் தோய்ந்த தனது துணிகளையும் மற்றும் உடைகளையும் தீயிட்டு கொளுத்தி எரித்துள்ளார்.

அதனை பள்ளியில் இருந்த பீப்பாய் ஒன்றில் போட்டு விட்டு பின்னர் வகுப்புக்கு சென்றுள்ளார்.  இதன்பின்னரே இறுதியாக, முறையாக பெற்றோர் ஆவதற்கான கவுன்சிலிங்கிற்கு சென்று ஆலோசனை பெற்றுள்ளார்.  குடும்ப கட்டுப்பாடு பற்றி அறிந்திருக்கிறார்.  அதுவே மற்ற  எல்லாவற்றையும் விட தன்னை பாதுகாத்தது.  அதுபற்றி எவரும் என்னிடம் பேச கூடிய சூழல் ஏற்பட்டது என அதில், அவர் குறிப்பிட்டு உள்ளார்.