சினிமா செய்திகள்

விஜய்க்கு வில்லனாக வித்யூத் ஜம்வால்? + "||" + Vidyut Jamwal as Vijay's villain?

விஜய்க்கு வில்லனாக வித்யூத் ஜம்வால்?

விஜய்க்கு வில்லனாக வித்யூத் ஜம்வால்?
விஜய் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்க வாய்ப்பு உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.
விஜய்யின் மாஸ்டர் படம் கொரோனா ஊரடங்கு தளர்வில் வெளியாகி நல்ல லாபம் பார்த்தது. தற்போது விஜய் புதிய படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். படவேலைகள் தொடங்கியுள்ளன. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கதாநாயகியாக பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்துள்ளனர். 

தேர்தல் முடிந்ததும் படப்பிடிப்பு முழுவீச்சில் நடக்க உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. இதில் விஜய்க்கு வில்லனாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. 

இவர் ஏற்கனவே ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், ஜெயராம் ஆகியோர் நடித்து 2012-இல் திரைக்கு வந்த துப்பாக்கி படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். தொடர்ந்து சூர்யாவின் அஞ்சான் படத்திலும் நடித்துள்ளார். வித்யூத் ஜம்வால் கூறும்போது ''விஜய்யுடன் நடிக்க நான் காத்திருக்கிறேன். காத்திருக்கவும் விரும்புகிறேன். ஆனால் தற்போது வெளியான தகவல் உண்மை இல்லை'’ என்றார். யார் வில்லன் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.