சினிமா செய்திகள்

என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா + "||" + They call me Vayadi -Actress Rashmika

என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா

என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா
என்னை வாயாடி என்கின்றனர் என நடிகை ராஷ்மிகா அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமான ராஷ்மிகா தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், ''வீட்டில் நான் சொன்னதுதான் நடக்க வேண்டும். படப்பிடிப்பு அரங்கில் மட்டுமல்ல வீட்டிலும் மகாராணி மாதிரிதான் இருப்பேன். 

சமையல் அறைக்கு போனாலும் யாரும் என்னை எதிர்த்து எதுவும் சொல்லக் கூடாது. எதை சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ அதை செய்து விடுவேன். ஆனால் சாதாரண பெண் மாதிரிதான் இருப்பேன். வீட்டு விவகாரங்களை நானே தலையில் தூக்கி போட்டு செய்வேன். வீட்டில் இருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் இருப்பதுவரை வீட்டில் எல்லோரையும் வாட்டி எடுத்து விடுவேன். 

வீட்டு வேலைகளை சுயமாக செய்ய எனக்கு விருப்பம். என் வேலைகளை நானே செய்து கொள்கிறேன். விருந்தினர்கள் யாராவது வந்தால் அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது, உணவு வழங்குவதில் இருந்து தேவையானதை நானே செய்வேன். எனக்கு வாய் அதிகம் வாயாடி என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் கார்த்தியிடம் ஐதராபாத் பற்றி நிறைய பேசி இருக்கிறேன். என்னை படப்பிடிப்பில் நன்றாக பார்த்துக்கொண்டார்.’' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. வீடுகளாக வாங்கி குவிப்பது ஏன்? நடிகை ராஷ்மிகா விளக்கம்
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி படங்களிலும் நடிக்கிறார்.