சினிமா செய்திகள்

குருவாயூர் கோவிலில் கீர்த்தி சுரேஷ் தரிசனம் + "||" + Keerthi Suresh Darshan at Guruvayur Temple

குருவாயூர் கோவிலில் கீர்த்தி சுரேஷ் தரிசனம்

குருவாயூர் கோவிலில் கீர்த்தி சுரேஷ் தரிசனம்
கீர்த்தி சுரேஷ் தனது தாயும் நடிகையுமான மேனகா மற்றும் தந்தையுடன் குருவாயூர் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்று தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த நிலையில் கீர்த்தி சுரேசுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. 

தொழில் அதிபரை மணக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை கீர்த்தி சுரேஷ் மறுத்தார். தனக்கு தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் சினிமாவில் முழு கவனம் செலுத்துகிறேன் என்றும் கூறினார். மூன்று நான்கு தடவை வெவ்வேறு மாப்பிள்ளைகளுடன் எனக்கு திருமணம் நடந்ததாக சில இணைய தளங்களில் வதந்திகள் வந்துள்ளன. தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது தாயும் நடிகையுமான மேனகா மற்றும் தந்தையுடன் குருவாயூர் கோயிலுக்கு சென்றார். 

அங்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அவர் கேரள முறைப்படி உடை அணிந்து கோவிலுக்குச் சென்று வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது