சினிமா செய்திகள்

வயது குறைந்தவரை மணக்க விரும்பும் நடிகை + "||" + An actress who wants to marry a minor

வயது குறைந்தவரை மணக்க விரும்பும் நடிகை

வயது குறைந்தவரை மணக்க விரும்பும் நடிகை
ஜெயம்ரவியின் கோமாளி படத்தில் நடித்தவர் கவிதா ராதேஷ்யாம். இந்த படத்தில் அவர் கவர்ச்சியாக நடித்து இருந்தார். தொடர்ந்து மேலும் சில தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
ஜெயம்ரவியின் கோமாளி படத்தில் நடித்தவர் கவிதா ராதேஷ்யாம். இந்த படத்தில் அவர் கவர்ச்சியாக நடித்து இருந்தார். தொடர்ந்து மேலும் சில தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். கவிதா ராதேஷ்யாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அந்த படங்களை ரசிகர்கள் வைரலாக்குகிறார்கள். தற்போது தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள கவிதா ராதேஷ்யாம் அதில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’எனக்கு யாருடனும் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. யாரையும் திருமணம் செய்துகொள்ளவும் தயாராகவில்லை. நான் இதுவரை யாரையும் காதலிக்கவும் இல்லை. இன்னும் 5 வருடங்கள் கழித்தே திருமணம் செய்து கொள்வேன். என்னை விட வயது குறைவானவரைத்தான் மணப்பேன். எனவே எனது திருமணம் பற்றி யாரும் கற்பனை வதந்திகளை பரப்ப வேண்டாம்’’ என்று கூறியுள்ளார்.