சினிமா செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி + "||" + Actor Akshay Kumar Hospitalised After Testing Positive For Coronavirus

கொரோனா பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சமடையத்தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா வைரஸ் புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அக்‌ஷய் குமார் நேற்று முதல் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். 

இந்நிலையில், நடிகர் அக்‌ஷய் குமார் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, அக்‌ஷய் குமார் தனது சமூகவலைதள பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், எனக்கு பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி, பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும் வேலை செய்கின்றன. நான் நலமுடன் உள்ளேன். ஆனால், மருத்துவ ஆலோசனைபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் கவனமாக இருங்கள்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அசாம் மாநிலத்தில் மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் இன்று 290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கர்நாடகாவில் இன்று 290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைவு
மராட்டியத்தில் ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைவாக பதிவாகியுள்ளது.
4. தமிழ்நாட்டில் இன்று 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.40 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24.40 கோடியாக அதிகரித்துள்ளது.