சினிமா செய்திகள்

இந்தி நடிகை பூமி பெட்னேகருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Bollywood Actress Bhumi Pednekar Tested Positive For Coronavirus

இந்தி நடிகை பூமி பெட்னேகருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தி நடிகை பூமி பெட்னேகருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தி நடிகை பூமி பெட்னேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சமடையத்தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா வைரஸ் புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தி நடிகை பூமி பெட்னேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக, நடிகை பூம் பெட்னேகர் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதுவரை எனக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. ஆனால், நான் தற்போது நலமுடன் உள்ளேன், நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். எனது மருத்துவரின் அறிவுரைகளை பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தற்போதைய சூழ்நிலையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டாம். நான் மிகக்கவனமாக இருந்தபோதும் எனக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. முகக்கவசம் அணியுங்கள், தொடர்ந்து கை கழுவுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், உங்கள் பொதுவான நடவடிக்கைகளில் கவனமாக இருங்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
2. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
3. புதிதாக 141 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 141 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3 போ் தொற்றுக்கு பலியாகினா்.
4. இங்கிலாந்தில் புதிதாக 39,950- பேருக்கு கொரோனா தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39,950- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஜூலை 19: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் இன்று 1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.