சினிமா செய்திகள்

வெறுப்பு காட்டுகின்றனர் சக நடிகைகளை சாடிய கங்கனா + "||" + Kangana Ranaut hates fellow actresses

வெறுப்பு காட்டுகின்றனர் சக நடிகைகளை சாடிய கங்கனா

வெறுப்பு காட்டுகின்றனர் சக நடிகைகளை சாடிய கங்கனா
இந்தி பட உலகில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார் கங்கனா ரணாவத்.
இந்தி பட உலகில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார் கங்கனா ரணாவத். தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையிலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கும் தேர்வானார். ஆனாலும் சக நடிகைகள் தன்னை வாழ்த்தாமல் வெறுப்பு காட்டுவதாக சாடி உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள பதிவில், “சினிமா துறையில் இருக்கும் எல்லா நடிகைகளையும் நான் ஆதரித்தும் வாழ்த்தியும் இருக்கிறேன். ஆனால் எனக்கு எந்த நடிகையும் ஆதரவோ வாழ்த்தோ சொல்லியது இல்லை. அவர்கள் சூழ்ச்சி செய்து எனக்கு எதிராக செயல்படுகின்றனர். மற்ற நடிகைகள் அவர்களின் படங்களை பார்க்க என்னை அழைப்பார்கள். பூங்கொத்துக்கள் அனுப்பியும் கெஞ்சுவார்கள். நானும் போவேன். ஆனால் எனது படங்களை திரையிடும்போது நான் அழைத்தால் எனது அழைப்பையே அவர்கள் எடுப்பது இல்லை.

நடிகைகள் என்னை வெளியுலக்குக்கு மோசமாக சித்தரித்து வைத்துள்ளனர்'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. எங்களை துரோகிகள் என கூறுபவர்களே துரோகிகள்; மம்தா பானர்ஜியை சாடிய எம்.பி. சிசிர் அதிகாரி
எங்களை துரோகிகள் என கூறுபவர்களே துரோகிகள் என மம்தா பானர்ஜியை எம்.பி. சிசிர் அதிகாரி சாடியுள்ளார்.
2. திருட்டு கதை புகாரில் சிக்கிய கங்கனா
தமிழில் தாம்தூம் படத்தில் நடித்த கங்கனா ரணாவத் தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான தலைவி படத்தில் நடித்துள்ளார்.
3. ரூ.2 கோடி நஷ்டஈடு வழக்கு: மும்பை மாநகராட்சியை சாடிய கங்கனா ரணாவத்
நடிகை கங்கனா ரணாவத் வலைத்தளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.