சினிமா செய்திகள்

பஸ்சில் பயணித்த சிவகார்த்திகேயன் + "||" + Sivakarthikeyan traveling by bus

பஸ்சில் பயணித்த சிவகார்த்திகேயன்

பஸ்சில் பயணித்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை மாகநர பஸ்சில் மகளுடன் பயணித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை மாகநர பஸ்சில் மகளுடன் பயணித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த செயல் சிவகார்த்திகேயனின் எளிமையை காட்டுகிறது என்று அவரது ரசிகர்கள் வலைத்தளத்தில் பாராட்டி வருகிறார்கள். புகைப்படத்தை வைரலாக்கவும் செய்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்காக சிவகார்த்திகேயன் பயணிகளோடு பயணியாக பஸ்சில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்து 2019-ல் மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ ஆகிய 3 படங்கள் வந்தன. கொரோனாவால் கடந்த வருடம் படங்கள் இல்லை. தற்போது டாக்டர், டான், அயலான் ஆகிய 3 படங்கள் கைவசம் வைத்துள்ளார். இதில் டாக்டர் படம் முடிந்து அடுத்த மாதம் திரைக்கு வர தயாராக உள்ளது. இதில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் டைரக்டு செய்துள்ளார். அயலான் பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதில் நாயகியாக ரகுல்பிரீத் சிங் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.75 கோடி சம்பளம் 5 புதிய படங்களில் சிவகார்த்திகேயன்
ரூ.75 கோடி சம்பளம் 5 புதிய படங்களில் சிவகார்த்திகேயன்.
2. ஓட்டுப்போட அழைத்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் ஜனநாயக கடமையாற்றிய பின்னர் பொதுமக்களுக்கு ஓட்டுப்போட அழைப்பு விடுத்தார்.