பிரபல நடிகர் மரணம்


பிரபல நடிகர் மரணம்
x
தினத்தந்தி 5 April 2021 11:46 PM GMT (Updated: 5 April 2021 11:46 PM GMT)

பிரபல மலையாள நடிகர் பி.பாலச்சந்திரன் மரணம் அடைந்தார்.

பிரபல மலையாள நடிகர் பி.பாலச்சந்திரன் மரணம் அடைந்தார். இவர் கோட்டயத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70. பாலச்சந்திரன் மலையாளத்தில், சார்லி, கம்மட்டி பாடம், நதன், அன்னயும் ரசூலும், பியூட்டிபுல், அதிரன் உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக மம்முட்டியுடன் ஒன் படத்தில் நடித்து இருந்தார். இவன் மேகரூபம் என்ற படத்தை இயக்கி உள்ளார். ஏராளமான படங்களுக்கு திரைக்கதையும் எழுதி இருக்கிறார். சிறந்த நடிகருக்கான கேரள சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுள்ளார். பாலசந்திரன் மறைவுக்கு மலையாள நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மரணம் அடைந்த பாலசந்திரனுக்கு ஶ்ரீலதா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

Next Story