சினிமா செய்திகள்

அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரஷ்மிகா மந்தன்னா + "||" + Rashmika Mandanna celebrates her birthday with Amitabh Bachchan

அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரஷ்மிகா மந்தன்னா

அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரஷ்மிகா மந்தன்னா
நடிகை ரஷ்மிகா மந்தன்னா தனது பிறந்தநாளை நடிகர் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து கொண்டாடினார். அதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகை ரஷ்மிகா மந்தன்னா
தமிழ், தெலுங்கு மற்று இந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ரஷ்மிகா மந்தன்னா. இவரது சொந்த ஊர் குடகு மாவட்டம் ஆகும். இவர் தற்போது தமிழ் மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் இயக்குனர் விகாஷ் பகல் இயக்கத்தில் இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதில் இந்தி திரை உலக நட்சத்திர நடிகர் அமிதாப் பச்சனும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரஷ்மிகா மந்தன்னாவுக்கு பிறந்தநாள் வந்தது. அவர் தனது பிறந்தநாளை அமிதாப் பச்சனுடன் சேர்ந்து கொண்டாட திட்டமிட்டார். அதன்பேரில் அவர் படப்பிடிப்பு தளத்திலேயே அமிதாப் பச்சனுடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அமிதாப் பச்சன், இயக்குனர் விகாஷ் பகல் உள்பட நடிகர், நடிகைகளும், திரை உலகத்தினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு
மேலும் பலர் போன் மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுபற்றி நடிகை ரஷ்மிகா மந்தன்னா கூறுகையில், ‘‘நடிகர் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடியதுதான் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு’’ என்று கூறினார்.மேலும் அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அமிதாப் பச்சனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.