நடிகர் விஜய்சேதுபதி ஓட்டு போட்டு விட்டு நிருபர்களிடம் கூறும்போது, “நான் ஓட்டு போட்டு இருக்கிறேன். வாழ்க ஜனநாயகம். நன்றி'' என்றார்.
நடிகர் விஜய்சேதுபதி ஓட்டு போட்டு விட்டு நிருபர்களிடம் கூறும்போது, “நான் ஓட்டு போட்டு இருக்கிறேன். வாழ்க ஜனநாயகம். நன்றி'' என்றார். ஏற்கனவே சாதி, மதத்துக்கு எதிராக வாக்களிக்கும்படி சொன்னீர்களே? என்று கேள்வி எழுப்பியபோது, “அது நான் 2019-ல் சொன்னது'' என்றார். இப்போது உங்கள் நிலைப்பாடு எப்படி உள்ளது? என்று கேட்டபோது “எப்போதும் அதேதான் நிலைப்பாடு. என்னைப் பொறுத்தவரை மனிதன்தான் முக்கியம்’' என்றார்.
இப்போது ஓட்டு போட்டதும் அதே நிலைப்பாட்டில்தானா என்று கேள்வி எழுப்பியதும், காட்டமான விஜய்சேதுபதி. கோபத்தோடு, “இப்போது இல்லை எத்தனை வருஷம் ஆனாலும் இப்படித்தான் சொல்வேன். நான் மனிதன்'' என்று ஆவேசமாக பேசிவிட்டுசென்றார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.