சினிமா செய்திகள்

கொரோனா கட்டுப்பாடு மீறல்: ரசிகர்களை கண்டித்த நடிகர் அஜித்குமார் + "||" + Corona control violation: Actor Ajith Kumar condemns fans

கொரோனா கட்டுப்பாடு மீறல்: ரசிகர்களை கண்டித்த நடிகர் அஜித்குமார்

கொரோனா கட்டுப்பாடு மீறல்: ரசிகர்களை கண்டித்த நடிகர் அஜித்குமார்
கொரோனா கட்டுப்பாடு மீறல்: ரசிகர்களை கண்டித்த நடிகர் அஜித்குமார் செல்பி எடுத்தவரின் செல்போனை பறித்தார்.
நடிகர் அஜித்குமார் முக கவசம் அணிந்து தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு ஓட்டு போட காலை 6.40 மணிக்கு வந்தார். அப்போது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். செல்பி எடுக்க முண்டியடித்தனர். அஜித்துக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

கொரோனா பரவல் உள்ள சூழ்நிலையில் ரசிகர்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காததால் அஜித் ஆத்திரம் அடைந்தார். அவருடன் ‘செல்பி' எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபமாக பிடுங்கி வைத்துக்கொண்டார். வாக்குச்சாவடி மையத்தில் திரண்டிருந்த ரசிகர்களை வெளியே செல்லுங்கள் என்று கோபத்துடன் கூறினார்.

இதையடுத்து ரசிகர்கள் கலைந்து சென்றனர். பின்னர் அஜித் ஓட்டு போட்டு விட்டு சென்றார். அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி அதே வாக்குச்சாவடியில் பெண்கள் வரிசையில் வாக்களித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகர் மரணம்
பிரபல மலையாள நடிகர் படன்நயில். இவர் மேடை நாடகங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். ஸ்ரீகிருஷ்ணபுரத்தே நக்சத்திரத்திலக்கும், ருதன்மரே சூக்‌சிக்குகா ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார்.
2. கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் மு.க.ஸ்டாலினிடம், நடிகர் தியாகராஜன் வழங்கினார்
கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் மு.க.ஸ்டாலினிடம், நடிகர் தியாகராஜன் வழங்கினார்.
3. ரூ.7 லட்சம் ஆன்லைன் மோசடி சினிமா துணை நடிகர் கைது
ரூ.7 லட்சம் ஆன்லைன் மோசடி சினிமா துணை நடிகர் கைது.
4. நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்
நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்.
5. நடிகர்-ஒளிப்பதிவாளர் அருண்மொழிவர்மன் திடீர் மரணம்
மறைந்த பழம் பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகன் அருண்மொழி வர்மன். இவர் பிரபல நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதகுமாரி ஆகியோரின் சகோதரர் ஆவார்.