சினிமா செய்திகள்

கொரோனா 2-வது அலை பயத்தில் ரகுல் பிரீத் சிங் + "||" + Ragul Preet Singh in fear of Corona 2nd wave

கொரோனா 2-வது அலை பயத்தில் ரகுல் பிரீத் சிங்

கொரோனா 2-வது அலை பயத்தில் ரகுல் பிரீத் சிங்
கொரோனா 2-வது அலை பயத்தில் ரகுல் பிரீத் சிங்.
நடிகை ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

“நான் சினிமாவில் நடிக்க வந்து பத்து வருடங்கள் ஆகிறது. இப்போதும் கைவசம் அதிக படங்கள் உள்ளன. அதற்கு காரணம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததுதான். சினிமாவில் ஒவ்வொரு படியாக ஏறிப்போக வேண்டும் என்று நினைத்தேன். அதை செயல்படுத்தியும் வருகிறேன். நடிப்பை இன்னும் சிறப்பாக மெருகேற்ற என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையோடுதான் தினமும் காலையில் எழுகிறேன்.

5 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த அதே கதையில் கதாபாத்திரங்களில் இப்போதும் நடித்தால் எந்த பயனும் இல்லை. புதுசா செய்ய எனக்கு இஷ்டம். கொரோனா இரண்டாவது அலை உருவாகி இருப்பதை நினைக்கும்போது மிகவும் பயமாக இருக்கிறது. ஊரடங்குக்கு பிறகு கடந்த வருடம் படப்பிடிப்பு அரங்குக்கு செல்ல பயந்தேன். எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும் பயம் இன்னும் அதிகமானது. ஆனால் நாலைந்து நாட்களில் குணமாகி விட்டேன். அதன்பிறகு உடற்பயிற்சி செய்தபோது மிகவும் உடல் வலிக்க ஆரம்பித்துவிட்டது. இனிமேல் நம்மால் உடற்பயிற்சி, யோகா, பிராணாயாமம் செய்ய முடியாதோ என்று பயந்தேன். இப்போது கொரோனா இரண்டாவது அலை பரவி எங்கு பார்த்தாலும் பாதிப்பு அதிகமாக இருப்பதால் மறுபடியும் பயம் அதிகமாகி உள்ளது.’'

இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.