சினிமா செய்திகள்

டைரக்டருக்கு கொரோனா + "||" + Corona to the director

டைரக்டருக்கு கொரோனா

டைரக்டருக்கு கொரோனா
தெலுங்கில் அர்த்தங்கி, ஸ்ரீ கிரிஷ்ணா, ராஜன்னா, ஸ்ரீ வள்ளி ஆகிய படங்களை இயக்கியவர் விஜயேந்திர பிரசாத். பாகுபலி படத்துக்கு திரைக்கதை எழுதி பிரபலமானார்.
தெலுங்கில் அர்த்தங்கி, ஸ்ரீ கிரிஷ்ணா, ராஜன்னா, ஸ்ரீ வள்ளி ஆகிய படங்களை இயக்கியவர் விஜயேந்திர பிரசாத். பாகுபலி படத்துக்கு திரைக்கதை எழுதி பிரபலமானார். தற்போது கங்கனா ரணாவத் நடிப்பில் தயாராகி உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்துக்கு திரைக்கதை எழுதி உள்ளார். விஜய்யின் மெர்சல் படத்துக்கும் திரைக்கதை எழுதி இருந்தார். கங்கனா ரணாவத் நடிப்பில் வந்த ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கை கதையான மணிகர்ணிகா, தெலுங்கில் வெற்றி பெற்ற மகதீரா, எமதுங்கா, சத்ரபதி உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.

விஜயேந்திர பிரசாத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன்னுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா இரண்டாவது அலையில் நடிகர் நடிகைகள் பலர் சிக்கி உள்ளனர். அமீர்கான், அக்‌ஷய்குமார், மாதவன், அலியாபட், கத்ரினா கைப் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய உச்சம் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 954 பேர் பாதிப்பு 6 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய உச்சமாக கொரோனா தொற்றால் ஒரே நாளில் 954 பேர் பாதிப்புகுள்ளானார்கள். 6 பேர் உயிரிழந்தனர்.
2. காஞ்சீபுரத்தில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி கூடிய பொதுமக்கள் கொரோனா தொற்று பரவும் அபாயம்
காஞ்சீபுரத்தில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி கூடிய பொதுமக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
3. கொரோனா தொற்று காரணமாக தடுப்புகள் வைத்து மாமல்லபுரம் கடற்கரை மூடல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கொரோனா தொற்று காரணமாக தடுப்புகள் வைத்து மூடப்பட்ட மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
4. இந்தியாவில் கொரோனா பரவலில் புதிய உச்சம் ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு தொற்று
இந்தியாவில் கொரோனா பரவலில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
5. இந்தியாவில் 92 நாளில் 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி அமெரிக்கா, சீனாவை விட வேகம்
இந்தியாவில் 92 நாளில் 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த வகையில் , நமது நாடு தடுப்பூசி போடுவதில் அமெரிக்கா, சீனாவை விட வேகம் கண்டுள்ளது.