சினிமா செய்திகள்

'விக்ரம்' படத்தில் கமலுக்கு வில்லனாக பகத் பாசில்? + "||" + Bhagat Bachil to play Kamal's villain in 'Vikram'?

'விக்ரம்' படத்தில் கமலுக்கு வில்லனாக பகத் பாசில்?

'விக்ரம்' படத்தில் கமலுக்கு வில்லனாக பகத் பாசில்?
தேர்தல் முடிந்துள்ளதால் கமல்ஹாசன் புதிய படத்தில் நடிக்க தயாராகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
தேர்தல் முடிந்துள்ளதால் கமல்ஹாசன் புதிய படத்தில் நடிக்க தயாராகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை டைரக்டு செய்து பிரபலமானவர். படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகை தேர்வு நடக்கிறது. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்சிடம் ஏற்கனவே பேசி வந்தனர். இந்த நிலையில் பகத் பாசிலும் படத்தில் இணைந்துள்ளதால் அவர் வில்லனாக நடிப்பாரா அல்லது வேறு கதாபாத்திரமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் பகத் பாசில் வில்லனாக நடித்து இருந்தார். தெலுங்கு படமொன்றிலும் வில்லனாக வருகிறார். எனவே விக்ரம் படத்திலும் கமலுக்கு அவர் வில்லனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் வில்லன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். முந்தைய மாஸ்டர் படத்திலும் விஜய் சேதுபதியின் வில்லன் வேடம் விஜய்க்கு இணையாக இருந்தது. கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் வில்லன் வேடத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தி படத்தில் வில்லனாக விஷால்
தமிழ் நடிகர்கள் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
2. கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ்
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்கள் மூலம் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.
3. மீண்டும் வில்லனாக வினய்
கதாநாயகர்கள் வில்லன் வேடங்களில் நடிக்கின்றனர்.
4. மீண்டும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த தெலுங்கு ஸ்பைடர் படத்தில் வில்லனாக வந்தார்.