சினிமா செய்திகள்

ஆந்தையுடன் உறங்கும் ஹாலிவுட் நடிகை + "||" + Hollywood actress sleeping with an owl

ஆந்தையுடன் உறங்கும் ஹாலிவுட் நடிகை

ஆந்தையுடன் உறங்கும் ஹாலிவுட் நடிகை
பிரபல ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக்.

இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பாக காதலர் தின கொண்டாட்டத்தின்போது தனது கணவர் பிராங்கயிஸ் ஹென்றி பினால்டுக்கு ஒரு ஆந்தையை பரிசாக வழங்கினார். அந்த ஆந்தைக்கு, பிராயங்கயிஸ் கம்பெனியின் பெயரான கெரிங் என்ற பெயர் சூட்டப்பட்டது. தவிரவும் இந்த ஆந்தை, அந்த கம்பெனியின் சின்னமாகவும் மாறியது.இந்த ஆந்தை இப்போது சல்மாவின் செல்லப் பிராணியாகவும் மாறிப்போனது.

இது பற்றி அவர் கூறுகையில், “எனது கணவர் ஊரில் இல்லாதபோது, எனது அறையில் என்னுடன்தான் கெரிங் படுத்துறங்குகிறது. நான் ஐபேடில் டி.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பதுண்டு. அப்போது ஐபேட் அருகில் வந்து கெரிங் நின்று கொள்ளும். பொதுவாக ஆந்தைகள் மது அருந்தாது என்று சொல்வார்கள். ஆனால் எங்கள் கெரிங், நல்ல ஒயினை விரும்பிப்பருகுகிறது. என்னோடு கெரிங் இருக்கிற ஒவ்வொரு தருணமும் இனிமையானதுதான்” என உருகுகிறார்.“நல்ல நடிகை. கொடுத்து வைத்த ஆந்தை” என அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.