சினிமா செய்திகள்

படத்தில் வில்லன்; நிஜத்தில் ஹீரோ + "||" + The villain in the film; In fact the hero

படத்தில் வில்லன்; நிஜத்தில் ஹீரோ

படத்தில் வில்லன்; நிஜத்தில் ஹீரோ
திடுக்கிடும் மர்மங்களுடன், ‘ஓட்டம்’ என்ற பெயரில் ஒரு திகில் படம் தயாராகி வருகிறது. இதில் பிரதிப் வர்மா, மாடல் அழகி ஐஸ்வர்யா சிந்தோசி ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் வில்லன் நடிகர் ரவிசங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பு பெங்களூருவில் உள்ள ஒரு மாலில் நடந்தபோது, கதாநாயகி ஐஸ்வர்யா சிந்தோசியிடம் சில ஆசாமிகள் குறும்பு செய்தார்கள். அவர்களை ஓட ஓட விரட்டியடித்தார், வில்லன் ரவிசங்கர்.

படத்தில் வில்லனாக நடிக்கும் ஒருவர், நிஜவாழ்க்கையில் ஹீரோ போல் இருப்பதை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினார்கள்.