சினிமா செய்திகள்

அதர்வா படத்தில் ‘சிங்கிள் ஷாட்’டில் படமான சண்டை காட்சி + "||" + Fight scene from the movie 'Single Shot' in Adarva

அதர்வா படத்தில் ‘சிங்கிள் ஷாட்’டில் படமான சண்டை காட்சி

அதர்வா படத்தில் ‘சிங்கிள் ஷாட்’டில் படமான சண்டை காட்சி
அதர்வா நடிக்கும் பெயர் சூட்டப்படாத புதிய படத்தை சாம் ஆண்டன் டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்காக ஒரு சண்டை காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கினார்கள்.
அதர்வா நடிக்கும் பெயர் சூட்டப்படாத புதிய படத்தை சாம் ஆண்டன் டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்காக ஒரு சண்டை காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கினார்கள். இது, அதர்வா நடிக்கும் 25-வது படம் ஆகும். ரசிகர்களை வியக்க வைக்கும் காட்சியாக இந்த சண்டை காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

“இது, என் நீண்ட கால கனவு. நானும், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனும் இப்படி ஒரு சண்டை காட்சியை படமாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அது, இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது''. என்கிறார், அதர்வா.

``இப்படி ஒரு சண்டை காட்சியை படமாக்கியது, ஒரு சவாலாக இருந்தது. ஒரே ஒரு நாள் மட்டும்தான் ஒத்திகை பார்த்தோம். இந்த படத்துக்குப்பின், அதர்வா இந்திய அளவில் பிரபல நடிகராக மாறிவிடுவார்” என்கிறார், டைரக்டர் சாம் ஆண்டன்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய நடிகருடன் சண்டை போட தயாராகும் மைக் டைசன்... ஹீரோ யார் தெரியுமா?
உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், இந்திய நடிகர் ஒருவருடன் சண்டை போட தயாராகி இருக்கிறார்.