சினிமா செய்திகள்

நடிகர் யோகிபாபு மீது முடிதிருத்துவோர் சங்கத்தினர் பரபரப்பு புகார்; கமிஷனர் அலுவலகத்தில் மனு + "||" + Barbers' agitation complaint against actor Yogibabu; Petition in the Commissioner's Office

நடிகர் யோகிபாபு மீது முடிதிருத்துவோர் சங்கத்தினர் பரபரப்பு புகார்; கமிஷனர் அலுவலகத்தில் மனு

நடிகர் யோகிபாபு மீது முடிதிருத்துவோர் சங்கத்தினர் பரபரப்பு புகார்; கமிஷனர் அலுவலகத்தில் மனு
தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் நேற்று திரளாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த புகார் மனுவில், நடிகர் யோகிபாபு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 

புகார் மனு விவரம் வருமாறு:-

நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் முழுவதும் இது போன்ற காட்சிகள் உள்ளன. முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.