சினிமா செய்திகள்

கொரோனாவால் தாமதமாகும் பொன்னியின் செல்வன்; நடிகர் கார்த்தி தகவல் + "||" + Ponniyin Selvan film delayed by Corona; Actor Karthi

கொரோனாவால் தாமதமாகும் பொன்னியின் செல்வன்; நடிகர் கார்த்தி தகவல்

கொரோனாவால் தாமதமாகும் பொன்னியின் செல்வன்; நடிகர் கார்த்தி தகவல்
நடிகர் கார்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது:-

“அடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறேன். 1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக் கதை. இது பெரிய படம். இந்த கதையை தமிழ் திரையுலகம் கடந்த 60 ஆண்டுகளாக படமாக்க முயற்சி செய்து இப்போதுதான் நடக்கிறது. பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. 5 பாகங்கள் கொண்ட புத்தகத்தை 2 பாகங்கள் கொண்ட படமாக உருவாக்கி வருகிறோம். பொன்னியின் செல்வன் பட வேலைகள் நன்றாக போய்க்கொண்டு இருக்கின்றன. மத்திய பிரதேசத்தில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புக்கு அங்கு அனுமதி கிடைக்கவில்லை. கொரோனா பிரச்சினையால் படம் தாமதமாகி வருகிறது. சென்னை அல்லது ஐதராபாத்தில் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும். இந்த படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யாராய் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. இதுவரை 70 சதவீத படப்பிடிப்பை முடித்து விட்டோம்.''

இவ்வாறு கார்த்தி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்டங்கள் வாபஸ்: இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி - நடிகர் கார்த்தி
வேளாண் சட்டம் ரத்து குறித்த பிரதமரின் அறிவிப்பு உயிரை ஈந்து போராடிய விவசாயிகளின் இடைவிடாது போராட்டத்தின் வரலாற்று வெற்றி என்று நடிகர் கார்த்தி டுவீட் செய்துள்ளார்.