சினிமா செய்திகள்

விஜய் ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3 கோடி சம்பளம்? + "||" + Pooja Hegde charges Rs 3 crore for Thalapathy 65 alongside Vijay

விஜய் ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3 கோடி சம்பளம்?

விஜய் ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3 கோடி சம்பளம்?
மாஸ்டர் படத்துக்கு பிறகு சில வாரங்கள் ஓய்வில் இருந்த விஜய் இப்போது புதிய படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார்.
இந்த படத்தை நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வர உள்ள டாக்டர் படங்களை இயக்கி பிரபலமான நெல்சன் இயக்குகிறார். இது விஜய்க்கு 65-வது படம்.
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் 2012-ல் திரைக்கு வந்த முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்து பிரபலமானார். 

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். படப்பிடிப்புக்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளனர். அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு சென்னை திரும்புகிறார்கள்.இந்த படத்தில் கதாநாயகியாக வரும் பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3 கோடி சம்பளம் பேசி இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. பூஜா ஹெக்டே இதுவரை ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து திரைக்கு வந்த முந்தைய படமான அல வைகுந்தபுரமுலூ படத்தில் பூஜா ஹெக்டே ரூ.2 கோடி வாங்கி இருந்தார். ஆனால் விஜய் படத்தில் கூடுதலாக ரூ.1 கோடி கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சமூக சேவைக்கு மாறிய பூஜா ஹெக்டே
தமிழில் முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக அறிமுகமான பூஜா ஹெக்டே தற்போது விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.
2. விஜய்யுடன் இந்தி நடிகை நடித்த பாடல் காட்சி
விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தொடங்கியது. விஜய்யுடன் இந்தி நடிகை பூஜா ஹெக்டே நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
3. 66-வது படத்தில் விஜய் சம்பளம் ரூ.100 கோடி?
விஜய் இப்போது நெல்சன் டைரக்டு செய்யும் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு `பீஸ்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள் ளது. இது அவர் நடிக்கும் 65-வது படம்.
4. விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், விஜய்யை பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
5. கொரோனாவில் சிக்கிய கங்கனா, பூஜா ஹெக்டே பகிர்ந்த அனுபவங்கள்
கொரோனாவில் சிக்கிய கங்கனா, பூஜா ஹெக்டே இருவரும் அனுபவங்களை விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளனர்.