சினிமா செய்திகள்

‘சினிமாவில் நடிப்பது ஏன்?’’ வீரப்பன் மகள் விளக்கம் + "||" + "Why acting in cinema?" Veerappan's daughter explained

‘சினிமாவில் நடிப்பது ஏன்?’’ வீரப்பன் மகள் விளக்கம்

‘சினிமாவில் நடிப்பது ஏன்?’’ வீரப்பன் மகள் விளக்கம்
சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி, ‘மாவீரன் பிள்ளை’ என்ற படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார்.
சினிமாவில் நடிக்க வந்தது பற்றி அவர் கூறும்போது,

‘‘விவசாயிகள் மற்றும் மது ஒழிப்பு போராட்டங்கள் பற்றிய படம் என்பதால் நடிக்க சம்மதித்தேன். படப்பிடிப்பு தர்மபுரி மாவட்டத்தின் பல இடங்களிலும், டெல்லியிலும் நடந்தது. திரையுலகுக்கு வந்ததற்காக எனக்கு என் கணவர் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். நான் கவர்ச்சியாகவோ, ஆபாசமாகவோ நடிக்க மாட்டேன். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க 
விரும்புகிறேன்’’ என்றார்.

வீரப்பன் பற்றி பேசும்போது, ‘‘என் அப்பாவை நல்லவரா, கெட்டவரா? என்று கேட்கிறார்கள். என்னைப் பொருத்தவரை அவர் நல்லவர்தான். அப்பா வாழ்ந்த காட்டுக்குள் புதையல் இருக்கிறது. ஆனால் அது எங்கே இருக்கிறது என்று எங்களுக்கு தெரியாது’’ என்கிறார்.

‘மாவீரன் பிள்ளை’ படத்தில், ராதாரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தை தயாரித்து இயக்கி நடிப்பவர், ராஜா.

தொடர்புடைய செய்திகள்

1. சினிமாவில் நடித்தது நிஜத்தில் நடக்கிறது: நடிகர் வடிவேல்
நகைச்சுவை நடிகர் வடிவேல் கொரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோவில் பேசி இருப்பதாவது:-
2. துன்பத்தை ஏற்று கொள்வது தான் மகிழ்ச்சி; இன்ஸ்டாகிராமில் ஓவியத்தை வெளியிட்ட பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர்
பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் ஷாகித் கபூர். தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு ஓவியத்தின் படத்தை ஷாகித் கபூர் வெளியிட்டுள்ளார்.
3. டாக்டர்களை இழிவுப்படுத்தியதாக நகைச்சுவை நடிகர் மீது வழக்குப்பதிவு
டாக்டர்களை இழிவுப்படுத்தியதாக நகைச்சுவை நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
4. கேரளாவில், கைவசம் இருந்த ஒரு தொகுதியையும் இழந்த பா.ஜனதா; ‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரன், நடிகர் சுரேஷ் கோபி போராடி தோல்வி
கேரளாவில், தனது கைவசம் இருந்த ஒரு தொகுதியையும் பா.ஜனதா இழந்தது. மெட்ரோமேன் ஸ்ரீதரன், நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியபோதிலும், இறுதியில் தோல்வி அடைந்தனர்.
5. நடிகர் விவேக் இறப்புக்கும், தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை; இளைஞர்களின் பங்களிப்பு இருந்தால் கொரோனாவை வெல்ல முடியும்; கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தல்
நடிகர் விவேக் இறப்புக்கும், தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இளைஞர்களின் பங்களிப்பு இருந்தால் கொரோனாவை வெல்ல முடியும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.