சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ் + "||" + Director Mari Selvaraj thanked the fans on Twitter

ரசிகர்களுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ்

ரசிகர்களுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ்
‘கர்ணன்’ திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் ரசிகர்களுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய 2வது திரைப்படம் ‘கர்ணன்’ கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நடிகர் தனுஷ், நட்டி, லால், நடிகை ரஜிஷா விஜயன், கவுரி கிஷன்  உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியிலும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் கர்ணன் திரைப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்திருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கர்ணன் திரைப்படத்தை வெற்றி பெற வைத்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். இத்துடன் “கர்ணன்-தி சேவியர்” என்ற வாசகம் இடம்பெற்ற புகைப்படம் ஒன்றையும் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.