சினிமா செய்திகள்

படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வர மறுப்பு; திரிஷா மீது பட அதிபர் புகார் + "||" + Refusal to attend the film's promotional event; Film director complains about Trisha

படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வர மறுப்பு; திரிஷா மீது பட அதிபர் புகார்

படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வர மறுப்பு; திரிஷா மீது பட அதிபர் புகார்
ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு திரிஷா வராததால், அவர் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பட அதிபர் புகார் கொடுத்து இருக்கிறார்.

டைரக்டரும், தயாரிப்பாளருமான திரு இயக்கி வரும் புதிய படம், ‘பரமபத விளையாட்டு.’ இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்து வந்தார். அவருடன் நந்தா, ரிச்சர்டு, வேல ராமமூர்த்தி, சோனா ஆகியோரும் நடித்து வந்தார்கள்.படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகளும் முடிவடைந்தன. படத்தின் டிரைலரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தார்கள். டிரைலரும் தயாரானது.

டிரைலர் வெளியீட்டு விழாவில் கதாநாயகி திரிஷா கலந்து கொண்டால், படத்தின் வியாபாரத்துக்கு உதவியாக இருக்கும் என்று தயாரிப்பாளரும், டைரக்டருமான திரு கருதினார். இதற்காக திரிஷாவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் திரிஷா, விழாவுக்கு வர மறுத்ததுடன், ‘‘நயன்தாரா நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அவர் வருவதே இல்லை. எனக்கு ஒரு நீதி. அவருக்கு ஒரு நீதியா?’’ என்று கேட்டாராம்.

இதைத்தொடர்ந்து திரிஷா மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், டைரக்டரும் தயாரிப்பாளருமான திரு புகார் கொடுத்தார். அதன்பேரில், திரிஷாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

‘‘பட விழாவில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்றால், உங்களுக்கு தடை விதிக்கப்படும்’’ என்று எச்சரித்தபின், விழாவுக்கு வருவதாக திரிஷா ஒப்புக்கொண்டாராம்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆவின் முறைகேடு புகார் எதிரொலி: 34 உயர் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்
ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில், 34 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
2. மு.க.ஸ்டாலின், உதயநிதி குறித்து ‘டுவிட்டரில்’ அவதூறு தாம்பரம் போலீசில் தி.மு.க. புகார்
மு.க.ஸ்டாலின், உதயநிதி குறித்து ‘டுவிட்டரில்’ அவதூறு தாம்பரம் போலீசில் தி.மு.க. புகார்.
3. வேலை வாங்கி தருவதாக ரூ.83 லட்சம் மோசடி செய்த போலி அரசு அதிகாரி கடத்தல்
வேலை வாங்கி தருவதாக ரூ.83 லட்சம் மோசடி செய்த புகாரில் போலி அரசு அதிகாரியை காரில் கடத்திய 6 பேர் கும்பலை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்தனர். போலி அரசு அதிகாரி பத்திரமாக மீட்கப்பட்டார்.
4. மத்திய அரசு சட்டத்தை ஆதரிப்பதாக தவறான தகவல் பரப்புகிறார்கள் சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் போலீசில் புகார்
சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.
5. மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி வடபழனி போலீசில் 3 பேர் புகார்
மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த நபர் மீது வடபழனி போலீசில் 3 பேர் புகார் அளித்து உள்ளனர்.