சினிமா செய்திகள்

மீண்டும் தனி விமானத்தில் பயணித்த நயன்தாரா + "||" + Nayanthara traveled in a private plane again

மீண்டும் தனி விமானத்தில் பயணித்த நயன்தாரா

மீண்டும் தனி விமானத்தில் பயணித்த நயன்தாரா
தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலிலும் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.
அடிக்கடி தனி விமானத்தில் பயணித்தும் கவனிக்க வைக்கிறார். நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடிக்கு மேல் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. அதோடு விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதிக்கிறார். கடந்த வருடம் கொரோனா பரவல் ஊரடங்கில் சென்னையில் உள்ள வீட்டில் முடங்கி இருந்த அவர் ஊரடங்கு தளர்வில் தனி விமானத்தில் கோவாவுக்கும் கேரளாவுக்கும் சென்று வந்தார். தற்போது மீண்டும் கேரளாவில் வருகிற 14-ந்தேதி மலையாள புத்தாண்டை கொண்டாட காதலர் விக்‌னேஷ் சிவனுடன் நயன்தாரா தனி விமானத்தில் கொச்சி சென்றுள்ளார். அவர் விமானத்தில் பயணித்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அவை வைரலாகின்றன. நயன்தாரா கைவசம் தற்போது நெற்றிக்கண், ரஜினியுடன் நடிக்கும் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய 3 படங்கள் உள்ளன. நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் கேட்கிறார்?
தென்னிந்திய கதாநாயகிகளில் மிக அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாராதான்.
2. பண நெருக்கடியால் 9 வருடம் முடங்கிய நயன்தாரா படம்
பண நெருக்கடியால் 9 வருடம் முடங்கிய நயன்தாரா படம்.
3. நயன்தாராவின் ‘நெற்றிக்கண்' படம் ரூ.25 கோடிக்கு விற்பனை
நடிகர் ரஜினிகாந்த் உடன் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ள நயன்தாரா அடுத்தப்படியாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
4. சினிமா படபிடிப்புக்காக காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கொச்சின் சென்ற நயன்தாரா
'பாட்டு' சினிமா படபிடிப்புக்காக தனி விமானத்தில் காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சின் சென்றுள்ளார் நடிகை நயன்தாரா.
5. உலகப்பட விழாவில் நயன்தாரா படம்
உலகப்பட விழாவில் நயன்தாரா படம்.