சினிமா செய்திகள்

விக்ரமின் ‘கோப்ரா' ஓ.டி.டி.யில் ரிலீசா? + "||" + Will Vikram's 'Cobra' be released on OTT?

விக்ரமின் ‘கோப்ரா' ஓ.டி.டி.யில் ரிலீசா?

விக்ரமின் ‘கோப்ரா' ஓ.டி.டி.யில் ரிலீசா?
கொரோனாவால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் புதிய படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே சூர்யாவின் சூரரை போற்று, ஜெயம் ரவியின் பூமி. விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம், மாதவனின் சைலன்ஸ், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின், யோகிபாபுவின் மண்டேலா உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளிவந்தன. திரிஷா நடித்துள்ள பரம பதம் விளையாட்டு படமும் ஓ.டி.டியில் வருகிறது. இந்த நிலையில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படமும் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளாகவும் இந்த படத்தை ஓ.டி.டி தளம் பெரிய விலை கொடுத்து வாங்கி இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் 
வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது தியேட்டர் அதிபர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த தகவல் உண்மை அல்ல என்று கோப்ரா பட நிறுவனம் மறுத்துள்ளது. கோப்ரா படம் தியேட்டரில் வெளியாகுமா அல்லது ஓ.டி.டியில் வருமா என்பது சில வாரங்களுக்கு பிறகே தெரிய வரும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். ஶ்ரீநிதி ஷெட்டி நாயகியாக வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. இரண்டு பாகங்களாக கமலின் ‘விக்ரம்'?
கார்த்தியின் கைதி மற்றும், விஜய்யின் மாஸ்டர் படங்களை இயக்கி பிரபலமான லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்யும் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.
2. தீபாவளி ரேஸில் இணையும் விக்ரம்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம், அடுத்ததாக நடித்துள்ள படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
3. சூப்பர் ஹீரோ கதையில் விக்ரம்
விக்ரம் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க உள்ளதாகவும், பா.ரஞ்சித் இயக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
4. வீரமே வாகையைச் சூடும்...வெளியானது கமலின் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக்...!
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய மூன்று பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
5. ஓ.டி.டி.யில் வெளியாகும் புதிய படங்கள்
கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து தியேட்டர்களையும் மூடி உள்ளது.