சினிமா செய்திகள்

கொரோனா 2-வது அலையால் ‘தலைவி' படம் ரிலீஸ் தள்ளிவைப்பு + "||" + Postponement of Thalaivi film release by Corona 2nd wave

கொரோனா 2-வது அலையால் ‘தலைவி' படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

கொரோனா 2-வது அலையால் ‘தலைவி' படம் ரிலீஸ் தள்ளிவைப்பு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள தலைவி படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன
இந்த படம் வருகிற 23-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் பல மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களின் ரிலீசை தள்ளி வைக்க படக்குழுவினர் ஆலோசிக்கிறார்கள். கொரோனாவால் தலைவி படத்தின் ரிலீசை தள்ளி வைத்து இருப்பதாக பட நிறுவனம் தற்போது அறிவித்து உள்ளது. கொரோனா 
தொற்று அடங்கிய பிறகு புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்க முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர். 

சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. கங்கனா ரணாவத் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. தலைவி படத்துக்கு பெரிய எதிர்பாப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை என்ன செய்ய திட்டம். ...?ஜெ.தீபா பரபரப்பு பேட்டி
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு ஜெ.தீபா வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம் என அவர் கூறியுள்ளார்.
2. சசிகலா குறித்து நான் எந்த கருத்தையும் கூற தயாராக இல்லை: கே.ஏ.செங்கோட்டையன்
சசிகலா குறித்து நான் எந்த கருத்தையும் கூற தயாராக இல்லை என கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
3. தொண்டர்களைத்தான் எனக்கு துணையாக ஜெயலலிதா விட்டு சென்றுள்ளார்: சசிகலா
சசிகலா, தினமும் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார். இந்த ஆடியோ பதிவுகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்தவகையில் தூத்துக்குடியை சேர்ந்த ரூபம் வேலவன் என்ற தொண்டரிடம் சசிகலா நேற்று பேசியுள்ளார்.