சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் 4 புதிய படங்கள் + "||" + Starring Dhanush 4 new pictures

தனுஷ் நடிக்கும் 4 புதிய படங்கள்

தனுஷ் நடிக்கும் 4 புதிய படங்கள்
தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியில் அந்த்ராங்கி ரே படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். தற்போது தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அடுத்து தனுஷ் 4 புதிய படங்களில் நடிக்க இருக்கிறார். அவற்றில் ஒரு படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார். இவர் துருவங்கள் பதினாறு, மாபியா ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர். இது தனுசுக்கு 43-வது படம். இந்த படத்தை முடித்துவிட்டு 44-வது படமாக செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு நானே வருவேன் என்று பெயர் வைத்துள்ளனர். படத்துக்கான இதர நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் செல்வராகவன் ஈடுபட்டு உள்ளார். தொடர்ந்து ராம்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படங்களுக்கு பிறகு செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சாணி காகிதம் படத்தை டைரக்டு செய்து வரும் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.