சினிமா செய்திகள்

தாமதமாகும் கமலின் இந்தியன் 2 + "||" + Kamal late Indian2

தாமதமாகும் கமலின் இந்தியன் 2

தாமதமாகும் கமலின் இந்தியன் 2
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்துக்கு தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டு வருவதால் படம் எப்போது தயாராகும் என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
இந்த படத்தை ஆரம்பித்தபோதே கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லாமல் சில மாதங்கள் முடங்கியது. பின்னர் சென்னை அருகே படப்பிடிப்பை தொடங்கியபோது கிரேன் சரிந்து படக்குழுவை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவத்தால் படப்பிடிப்பு மீண்டும் நின்றுபோனது. தொடர்ந்து கமல்ஹாசன் அரசியல் பணிகள் மற்றும் தேர்தலில் கவனம் செலுத்தியதால் பட வேலைகள் நடக்கவில்லை. தேர்தல் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க கமல்ஹாசன் தயாராகி இருக்கிறார். ஷங்கரும் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்கும் பணியில் இறங்கி உள்ளார். இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் ஷங்கர் தெலுங்கு படம் இயக்கக்கூடாது என்று பட நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தும் ஷங்கருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்துள்ளது. தற்போது தெலுங்கு படப்பிடிப்பை தொடங்க ஷங்கர் தீவிரமாகி உள்ளார். இதனால் இந்தியன் 2 படத்தின் கதி என்னவாகும் என்ற குழப்பம் நிலவுகிறது.