சினிமா செய்திகள்

‘அண்ணாத்த' படத்தில் இளமையான ரஜினி புகைப்படம் வெளியானது + "||" + In the Annatha film Young Rajini photo Released

‘அண்ணாத்த' படத்தில் இளமையான ரஜினி புகைப்படம் வெளியானது

‘அண்ணாத்த' படத்தில் இளமையான ரஜினி புகைப்படம் வெளியானது
கொரோனா பரவல் அடங்காததால் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்குறி எழுந்தது.
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடந்தபோது படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். கொரோனா பரவல் அடங்காததால் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்குறி எழுந்தது.

இந்த நிலையில் பல மாத இடைவெளிக்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினிகாந்த் கடந்த வாரம் தனி விமானத்தில் சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். அண்ணாத்த படப்பிடிப்பில் அவர் பங்கேற்று நடித்து வருகிறார். இந்த நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் புகைப்படத்தை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். புகைப்படத்தில் ரஜினிகாந்த் வேட்டி சட்டையில் இளமை தோற்றத்தில் இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதனை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிவா இயக்குகிறார். கிராமத்து கதையம்சத்தில் தயாராகிறது. இந்த படம் வருகிற தீபாவளி பண்டிகையில் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘அண்ணாத்த’ படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த்; தங்கையாக கீர்த்தி சுரேஷ்
ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘அண்ணாத்த’ படம், அண்ணன்-தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட கதை.
2. ‘அண்ணாத்த’ படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த்; தங்கையாக கீர்த்தி சுரேஷ்
ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘அண்ணாத்த’ படம், அண்ணன்-தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட கதை.