சினிமா செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் விரும்பினால் போட்டி; பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்டி + "||" + Competition in the US presidential election if the people want it; Hollywood Actor

அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் விரும்பினால் போட்டி; பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்டி

அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் விரும்பினால் போட்டி; பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்டி
அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் விரும்பினால் போட்டியிடுவேன் என்று தி ராக் என அறியப்படும் பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்டியில் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,

ஹாலிவுட் படங்களில் நடித்து வருபவர் நடிகர் டுவைன் ஜான்சன்.  தொழில் முறையில் மல்யுத்த போட்டி வீரரான, சாம்பியன் பட்டம் வென்றவரான, மக்களால் தி ராக் என அறியப்படும் ஜான்சன் பின்னர் ஹாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அமெரிக்க அதிபராக போட்டியிடுவது பற்றி பதிலளித்து பேசினார்.  அவர் கூறும்பொழுது, இதனை தான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும், ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் மக்களுக்காக பணியாற்ற தயார் என கூறினார்.

இதபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், வழுக்கை தலையுடன், பாதி கருப்பினத்தவராகவும், பாதி சமோவா நாட்டினராகவும் உள்ள, மதுபானம் குடிக்கும், லாரி ஓட்டும் ஒருவரை அதிபராக தேர்ந்தெடுக்க விரும்புவார்கள் என்பதில் எனக்கு உறுதியில்லை.  ஆனால், அது நடந்ததென்றால் மக்களுக்கு சேவை செய்வதென்பது எனக்கு கிடைக்கும் கவுரவம் என்று தெரிவித்து உள்ளார்.  டுவைன் ஜான்சன் அமெரிக்காவின் அதிபராக 46 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

எனினும், அதிபராக வருவதற்கு முன் சில அனுபவங்களை பெற வேண்டியுள்ளது.  மற்றும் அரசியல் கொள்கைகளையும் புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி; ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சாம்பியன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
2. மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
3. விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
4. மாநில அளவிலான ஆணழகன் போட்டி
ஜெயங்கொண்டத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.
5. தலைவர்கள் போட்டி பிரசாரம்: கொளத்தூரில் எடப்பாடி பழனிசாமியும் எடப்பாடியில் மு.க.ஸ்டாலினும் தீவிர ஓட்டுவேட்டை
மு.க.ஸ்டாலின் போட்டியிடும் சென்னை கொளத்தூரில் எடப்பாடி பழனிசாமியும், எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடியில் மு.க.ஸ்டாலினும் நேற்று போட்டி பிரசாரம் செய்தனர்.