சினிமா செய்திகள்

சின்னத்தம்பி வெளியாகி 30 ஆண்டுகள் புகைப்படம் பகிர்ந்து குஷ்பு நெகிழ்ச்சி + "||" + Khushboo Flexibility to share photo 30 years since Chinnathambi was released

சின்னத்தம்பி வெளியாகி 30 ஆண்டுகள் புகைப்படம் பகிர்ந்து குஷ்பு நெகிழ்ச்சி

சின்னத்தம்பி வெளியாகி 30 ஆண்டுகள் புகைப்படம் பகிர்ந்து குஷ்பு நெகிழ்ச்சி
பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு ஜோடியாக நடித்து 1991-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய படம் சின்னத்தம்பி. பிரபு, குஷ்பு திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனை படமாகவும் அமைந்தது.
பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு ஜோடியாக நடித்து 1991-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய படம் சின்னத்தம்பி. பிரபு, குஷ்பு திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனை படமாகவும் அமைந்தது. இந்த படத்துக்கு பிறகு இருவரும் முன்னணி நட்சத்திரங்களாக உயர்ந்தார்கள். சின்னத்தம்பி, சில தியேட்டர்களில் 300 நாட்களும் பல தியேட்டர்களில் 100 நாட்களும் ஓடியது. படத்தில் இடம்பெற்ற தூளியிலே ஆட வந்த, போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும், அட உச்சம் தல உச்சியிலே, குயில புடிச்சி கூண்டில் அடைச்சி கூவ சொல்லுகிற உலகம், நீ எங்கே என் அன்பே ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. தமிழக அரசின் விருதுகளையும் வென்றது. சின்னத்தம்பி படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நடிகை குஷ்பு படத்தில் பிரபுவுடன் நடித்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவில், “என்ன ஒரு முத்திரையை பதித்து இருக்கிறோம். சின்னத்தம்பி படம் வெளியாகி 30 வருடங்கள் ஆகிவிட்டன. காலம் வேகமாக பறந்து இருக்கிறது. படத்தின் இயக்குனர் பி.வாசு, இளையராஜா, சமீபத்தில் மறைந்த படத்தின் தயாரிப்பாளர் பாலு எனக்கு பிடித்த சக நடிகர் பிரபு மற்றும் என் மீது அன்பை பொழிந்த உங்கள் அனைவருக்கும் நான் கடன் பட்டு இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உயரத்தில் கிடைத்த உயரிய ஞாபகம்: ராஜீப் பிரதாப் ரூடி எம்.பி. இயக்கிய விமானத்தில் பயணித்த தயாநிதிமாறன் நெகிழ்ச்சி
ராஜீவ் பிரதாப் ரூடிஎம்.பி. இயக்கிய விமானத்தில் பயணம் செய்த தயாநிதிமாறன் எம்.பி. நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இது உயரத்தில் கிடைத்த உயரிய ஞாபகம் என்று தெரிவித்துள்ளார்.
2. விரலில் இடப்படும் ‘மை’க்காக காத்திருப்பேன்; ‘சென்னை வந்த பின் ஒருமுறைகூட வாக்களிக்கத் தவறியது இல்லை’; வாக்களித்த பின்னர் குஷ்பு பேட்டி
சென்னைக்கு வந்தபிறகு ஒருமுறைகூட வாக்களிக்கத் தவறியது இல்லை என்று நேற்று வாக்களித்த பின்னர் குஷ்பு தெரிவித்தார்.
3. ஆயிரம் விளக்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மோடி கையில் சமர்ப்பிப்பேன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு பேட்டி
ஆயிரம் விளக்கு தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று பிரதமர் மோடி கைகளில் சமர்ப்பிப்பேன் என்று அந்த தொகுதி பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு கூறி உள்ளார்.
4. கன்டெய்னர்களில் அலுவலக அறைகள்: சினிமா பாணியில் தேர்தல் பணிமனை நடிகை குஷ்பு அசத்தல்
சினிமா பாணியில்,கன்டெய்னர்களில் அலுவலக அறைகள் அமைத்து தேர்தல் பணிமனையை வடிவமைத்து நடிகை குஷ்பு அசத்தி உள்ளார்.
5. 3 கட்சிகளுக்கு மாறியது ஏன்? நடிகை குஷ்பு விளக்கம்
3 கட்சிகளுக்கு மாறியது ஏன்? நடிகை குஷ்பு விளக்கம்.