சினிமா செய்திகள்

படக்குழுவினருக்கு கொரோனா தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் ஷாருக்கான் + "||" + Shah Rukh Khan, the actor who isolated Corona from the film crew

படக்குழுவினருக்கு கொரோனா தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் ஷாருக்கான்

படக்குழுவினருக்கு கொரோனா தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் ஷாருக்கான்
படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தகவல் அறிந்ததும் ஷாருக்கான் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நடிகர்கள் அமீர்கான், அக்‌ஷய்குமார், மாதவன், ரன்பீர் கபூர். கோவிந்தா, கார்த்திக் ஆர்யன், செந்தில், டைரக்டர் சுந்தர்.சி. நடிகைகள் நக்மா, நிவேதா தாமஸ், கவுரி கிஷான், ஐஸ்வர்யா லட்சுமி, பூமி பெட்னெகர், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்கி உள்ளனர். சிலர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கான் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. ஷாருக்கான் பதான் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு துபாயில் நடந்தது. தற்போது மும்பையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். 

பதான் படக்குழுவினருக்கு முன் எச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்ததில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தகவல் அறிந்ததும் ஷாருக்கான் அதிர்ச்சியடைந்தார். அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். பதான் படத்தில் தீபிகா படுகோனே, ஜான் அபிரகாம் ஆகியோரும் நடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் ஷாருக்கான் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை
நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.