சினிமா செய்திகள்

ஷங்கர் இயக்கத்தில் ‘அந்நியன்' இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் + "||" + Ranveer Singh in the Hindi remake of 'Anniyan' directed by Shankar

ஷங்கர் இயக்கத்தில் ‘அந்நியன்' இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங்

ஷங்கர் இயக்கத்தில் ‘அந்நியன்' இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங்
ஷங்கர் இயக்கத்தில் ‘அந்நியன்' இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் நடிப்பதாகவும், ஜெயந்திலால் காடா தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005-ல் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற படம் ‘அந்நியன்'. இதில் அம்பி, ரெமோ, அந்நியன் ஆகிய மூன்று வித்தியாசமான தொற்றங்களில் விக்ரம் நடித்து இருந்தார். இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன. தற்போது அது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இந்தி பதிப்பையும் ஷங்கரே இயக்குகிறார். விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிப்பதாகவும், ஜெயந்திலால் காடா தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

நடிகை தீபிகா படுகோனேயின் கணவரான ரன்வீர் சிங் இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார். ஷங்கர் கூறும்போது, ‘’இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வமாக இருக்கிறேன். அந்நியன் படத்தின் கதை எல்லோரது மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க திறமையான நடிகர் வேண்டும். அந்த திறமை ரன்வீர் சிங்கிடம் இருக்கிறது. அவர் தனது அபாரமான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டுகிறார்’’ என்றார். ஷங்கர் ஏற்கனவே கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் பாதியில் நிற்கிறது. அடுத்து ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படங்களை முடித்து விட்டு இந்தியில் அந்நியன் படத்தை இயக்குகிறார்.