சினிமா செய்திகள்

கொரோனா தொற்று: சுந்தர்.சி உடல்நிலை குறித்து குஷ்பு பதிவு + "||" + Corona infection Regarding the health of Sundar.C Khushbu post

கொரோனா தொற்று: சுந்தர்.சி உடல்நிலை குறித்து குஷ்பு பதிவு

கொரோனா தொற்று: சுந்தர்.சி உடல்நிலை குறித்து குஷ்பு பதிவு
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. நடிகர், நடிகைகளும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள்.
பிரபல டைரக்டரும் நடிகருமான சுந்தர்.சி சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். நடிகையும் சுந்தர்.சியின் மனைவியுமான குஷ்பு கூறும்போது, ‘‘எனது கணவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் நலமாக இருக்கிறார். அவர் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள். சுந்தர்.சியோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவும்’' என்று கூறினார்.

சட்டமன்ற தேர்தலில் குஷ்புவை ஆதரித்து ஆயிரம் விளக்கு தொகுதியில் சுந்தர்.சி பிரசாரம் செய்த நிலையில் கொரோனா தொற்றில் சிக்கினார். தற்போது அவரது உடல்நிலை தேறி உள்ளது. இதுகுறித்து குஷ்பு டுவிட்டரில் தற்போது வெளியிட்ட பதிவில், “நண்பர்களே உங்கள் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்துள்ளது. எனது கணவர் சுந்தர்.சி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். ஆனாலும் அடுத்த 7 நாட்களுக்கு அவர் தனிமையில் இருப்பார். அவர் எங்களின் இல்லத்தில் தங்குவார். 7 நாட்களுக்கு பிறகுதான் நான் அவரை பார்க்க முடியும். அனைவரின் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,654- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 640-பேர் உயிரிழந்துள்ளனர்.
3. கொரோனாவுக்கு பெண் பலி
கொரோனாவுக்கு பெண் உயிரிழந்தார்.
4. கொரோனாவுக்கு 2 பேர் பலி
கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர்.
5. புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று