சினிமா செய்திகள்

விஜய் படப்பிடிப்புக்கு வந்த சிக்கல் + "||" + Vijay came for the shoot The problem

விஜய் படப்பிடிப்புக்கு வந்த சிக்கல்

விஜய் படப்பிடிப்புக்கு வந்த சிக்கல்
மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 65-வது படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஜார்ஜியாவில் தொடங்கியது.
சென்னையில் சைக்கிளில் சென்று ஓட்டு போட்டு விட்டு மறுநாளே ஜார்ஜியா சென்று படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். பெரும்பகுதி படப்பிடிப்பை ஜார்ஜியாவில் நடத்த ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

ஜார்ஜியாவில் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்ற புகைப்படம் வலைத்தளத்தில் வெளியானது. இந்த நிலையில் ஜார்ஜியாவில் தற்போது கடும் குளிர் மற்றும் அதிக மழை பெய்து வருவதாகவும், இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 15 நாட்கள் ஜார்ஜியாவில் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு சென்னை திரும்ப படக்குழுவினர் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கனமழை காரணமாக படப்பிடிப்பை முடிக்க மேலும் சில தினங்கள் தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. கொரோனா பரவலும் இடையூறு செய்கிறது.

பொங்கலுக்கு இந்த படத்தை திரைக்கு கொண்டு வர இருந்தனர். படப்பிடிப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக திட்டமிட்டபடி படம் திரைக்கு வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.