சினிமா செய்திகள்

படப்பிடிப்புக்கு போன இடத்தில் ஐஸ்வர்யா ராஜேசை கலங்க வைத்த சிறுமி + "||" + The girl who disturbed Aishwarya Rajesh at the place where she went to shoot

படப்பிடிப்புக்கு போன இடத்தில் ஐஸ்வர்யா ராஜேசை கலங்க வைத்த சிறுமி

படப்பிடிப்புக்கு போன இடத்தில் ஐஸ்வர்யா ராஜேசை கலங்க வைத்த சிறுமி
படப்பிடிப்புக்கு போன இடத்தில் ஐஸ்வர்யா ராஜேசை கலங்க வைத்த சிறுமி.
கேரளாவில் வெற்றி பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாள படத்தை, டைரக்டர் ஆர்.கண்ணன் தமிழில் தயாரித்து, இயக்கி வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று முடிவடைந்தது.

படத்தை பற்றி கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது:-

“பொதுவாக ஒரு படத்தை ரீமேக் செய்வது மிக கடினம். படத்தின் அடிப்படை ஆத்மாவை அப்படியே கொண்டு வருவது முடியாத காரியம். அதனால் நான் நிறைய ரீமேக் படங்களில் நடிக்க மறுத்து இருக்கிறேன். இன்றைய சமூகத்துக்கு மிகவும் தேவையான கருத்து இந்த படத்தில் இருப்பதால் நடிக்க சம்மதித்தேன்.

‘க/பெ ரணசிங்கம்’ படப்பிடிப்புக்காக போய் இருந்தபோது, நான் ஒரு சிறுமியை சந்தித்தேன். அவள் கதையை கேட்டு கலங்கிப் போனேன்.

அவளுக்கு எதுவும் சொல்லாமலே சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற சமூக அவலங்களை சொல்லும் படம், இது”.

டைரக்டர் ஆர்.கண்ணன் கூறும்போது, “நம் வீடுகளில் பெண்கள் வாழ்வின் பெரும்பகுதியை சமையல் அறை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அவர்களின் அடிப்படை உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் கொடுப்பதில்லை. இதை முகத்தில் அறைவது போல் இந்த படத்தில் சொல்லியிருக் கிறோம்” என்றார்.