சினிமா செய்திகள்

தனுஷ் பட வில்லன் உள்பட 2 நடிகர்களுக்கு கொரோனா + "||" + Corona for 2 actors

தனுஷ் பட வில்லன் உள்பட 2 நடிகர்களுக்கு கொரோனா

தனுஷ் பட வில்லன் உள்பட 2 நடிகர்களுக்கு கொரோனா
தமிழில் மாரி 2 படத்தில் தனுசுக்கு வில்லனாக நடித்தவர் டொவினோ தாமஸ். மலையாளத்தில் லூசிபர், வைரஸ், லூகா, தீவடி, கோதா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.
டோவினோ தாமசுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

டோவினோ தாமஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. நான் இப்போது தனிமையில் நலமாகவே இருக்கிறேன். மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். எல்லோரும் பாதுகாப்புடன் இருங்கள்'' என்று கூறியுள்ளார்.

இதுபோல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரபல இந்தி நடிகர் அஷுதோஷ் ராணாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர் தமிழில் ஆர்யா, மாதவன் நடித்த வேட்டை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே கொரோனா தடுப்பூசி முதல் தவணை போட்டபிறகு நடிகர் செந்தில், நடிகை நக்மா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.85 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.92 கோடியை தாண்டியது.
3. சீனாவில் புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
4. புனே மற்றும் ஐதராபாத்தில் இருந்து 4 லட்சத்து 70 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 2 கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 790 தடுப்பூசிகள் வந்து உள்ளன.
5. ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கொரோனா; ஊரடங்கை கண்காணிக்க ராணுவம் குவிப்பு
ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்க அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.