சினிமா செய்திகள்

தொற்றில் இருந்து மீண்ட நடிகைக்கு மீண்டும் கொரோனா + "||" + From infection To the overcoming actress Corona again

தொற்றில் இருந்து மீண்ட நடிகைக்கு மீண்டும் கொரோனா

தொற்றில் இருந்து மீண்ட நடிகைக்கு மீண்டும் கொரோனா
பிரபல இந்தி நடிகை பாருல் சவுத்ரி. இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
பாருல் சவுத்ரிக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று மீண்டார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பாருல் சவுத்ரி கூறும்போது, “எனக்கு கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது கஷ்டமாக தெரியவில்லை. தற்போது 2-வது முறை கொரோனா தொற்று ஏற்பட்டு மிகவும் கஷ்டப்படுகிறேன். உடம்பு வலி, தலை வலி இருக்கிறது. சோர்வாக உள்ளது. உடம்பில் தெம்பே இல்லை. வயிற்றுப்போக்கும் உள்ளது. எனது அம்மா, அப்பா. சகோதரிக்கும் கொரோனா தொற்று உள்ளது. அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறோம். ஒரு முறை கொரோனா வந்தால் மீண்டும் வராது என்று இருக்காதீர்கள். கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு சென்றால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது'' என்றார்.